welcome

Thinai Nila Vasigal

திணை நிலவாசிகளின் விதை - இயக்குநர் பகு. மேடை நாடகங்கள் மீது பெருங் காதல் கொண்டவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை உயிரியல் முடித்திருக்கும் இயக்குநர் பகு பதினைந்து ஆண்டுகளாக நாடகத் துறையில் இயங்கி வருகிறார். குறிப்பாக, பன்னிரெண்டு வருடங்கள் "மணல் மகுடி" குழுவில் இயக்குநர் முருகபூபதியின் மாணவனாக இருந்தவர். சர்வதேச புகழ்பெற்ற நாடகக் கலைஞர் அரியான் மிஸ்கின் அவர்களிடத்தும் இயக்குநர் பகு அவர்கள் பணிபுரிந்திருக்கிறார். ஒரு மேடை நடிகராக இந்தியா முழுவதும் சுற்றியவர். அமெரிக்காவிற்கும் சென்று நாடகங்களில் நடித்து வந்திருக்கிறார். நவீனம் தொலைத்துவிட்ட பாரம்பரியக் கலைகளை ஆகப்பெரும் ஆயுதமாக்கி பெரும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, இன்றைய இளைஞர்கள் மத்தியில் இந்தக் கலைகளைக் கொண்டு சேர்க்க பிரயத்தனப்பட்டு வருகிறார்.

Testimonial - Capacity Building workshops/interactions

Subscribe

Newsletter

Subscribe newsletter to be updated, we promise not to spam